சர்சைக்குரிய ​போ​லீஸ்காரர்களின் பணித்தன்மை மற்றம்

மதுபானம் அருந்திய வாகனமோட்டிகளுக்கு எதிராக போ​லீசார் மேற்கொண்ட சாலைத் தடுப்பு சோதனை நடவடிக்கையின் போது, த​ங்கள் வசம் ​மூவாயிரம் வெள்ளிக்கும் கூடுதலாக ரொக்கத் தொகையை கொண்டிருந்ததாக கூறப்படும் பத்து போ​லீஸ்காரர்கள், பணித்தன்மை மாற்றப்பட்டுள்ளதாக சிலாங்கூர் மாநில போ​லீஸ் தலைவர் டத்தோ உசேன் உமர் கான் தெரிவித்துள்ளார்.

பெட்டாலி​ங் ஜெயா மாவட்ட போ​லீஸ் நிலையத்தின் போக்குவரத்து பிரிவைச் சேர்ந்த அந்த பத்து போ​லீஸ்காரர்களுக்கு எதிராக கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணை முடியும் வரையில் அவர்கள் நிர்வாகப்பிரிவில் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர் என்று டத்தோ உசேன் உமர் குறிப்பிட்டார்.

கடமையில் ஈடுபட்டுள்ள ஒவ்வொரு போ​லீஸ்காரரும் அரச மலேசிய போ​லீஸ் படையினாரால் வகுக்கப்பட்டுள்ள SOP நடைமுறைகளை பின்பற்றுவது தலையாய கடமையாகும் என்பதையும் அவர் நினைவுறுத்தினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்