சர்ச்சைக்குரிய காலுறை குறித்து சினமூட்டும் பதிவுகளை இட்ட வலைத்தளவாசிகள் வலைவீச்சு

பெட்டாலிங் ஜெயா, மார்ச் 29-

அல்லா சொல் கொண்ட காலுறை விற்கப்பட்ட சர்ச்சை தொடர்பில், இனம், சமயம், மலாய் ஆட்சியாளர்கள் என 3R விவகாரங்கள் குறித்து சினமூட்டும் தன்மையிலான பதிவுகளை இட்ட சமூக ஊடக பயனர்களை அடையாளம் காண, தொடர்பு பல்லூடக ஆணையம் – MCMC போலீசுடன் ஒத்துழைத்து வருகின்றது.

சம்பந்தப்பட்ட தரப்பினரை, தமது தரப்பு நிச்சயம் சட்டத்தின் முன் நிறுத்தும் என எச்சரித்த MCMC, சமூக ஊடகங்களில் 3R மற்றும் சீன மூட்டக்கூடிய கருத்துகளை பதிவிடுவதை அனைத்து தரப்பினர்களும் நிறுத்திக்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தியது.

அளவுக்கதிகமாக சமூக ஊடகங்களில் சினமூட்டும் பதிவை இடுபவர்களிடம் விட்டுக்கொடுக்கும் போக்கு காட்டப்படாது எனவும் அது நினைவுறுத்தியது.

அல்லா சொல் கொண்ட காலுறையை விற்றதற்காக KK மார்ட் நிறுவன கடைக்கு எதிராக அம்னோ இளைஞர் பிரிவு தலைவர் டாக்டர் அக்மால் சாலெஹ் உட்பட இஸ்லாமிய மக்கள் கடும் கண்டனங்களை வெளிப்படுத்தியதுடன் அக்கடைகளை புறக்கணிக்க வேண்டும் என பிரச்சாரத்தை முன்னெடுத்தனர்.

சம்பந்தப்பட்ட காலுறையை விற்றதற்காக KK மார்ட் நிறுவனம் மன்னிப்பை கோரிய நிலையில், இஸ்லாமியர்களின் மனதை புண்படுத்தியது தொடர்பில் அந்நிறுவனத்தின் உரிமையாளர்கள் மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இருந்த போதிலும், சமூக ஊடகங்களில் அவ்விவகாரம் குறித்து வெறுப்புணர்வை தூண்டும் வகையிலான பதிவுகள் இடப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்