போலீஸ் போல் நடித்து, 8 வெளிநாட்டினரிடம் கொள்ளை; பொதுச்சேவை ஊழியர் உள்பட 4 ஆடவர்கள் கைது!

கிளாந்தான், மே 20-

கிளாந்தான்-னில் போலீஸ் போல் நாடகமாடி, 8 வெளிநாட்டு தொழிலாளர்களிடம் கொள்ளையிட்டிருந்த பொதுச்சேவை ஊழியர்கள் உள்பட 4 ஆடவர்களை போலீஸ் கைது செய்துள்ளது.

நேற்று முந்தினம் இரவு மணி 10.30 வாக்கில், சம்பந்தப்பட்ட 8 தொழிலாளர்களும் வீட்டை நோக்கி நடந்து சென்றுக்கொண்டிருந்த போது, தங்களை போலீஸ் என அடையாளப்படுத்திக்கொண்ட அந்த ஏமாற்றுப்பேர்வழிகள், அவர்களிடமிருந்து பணப்பை, கைப்பேசிகள் அகதிகளுக்கான ஐ.நா உயர் ஆணையத்தின் அட்டை முதலானவற்றை பறித்துக்கொண்டு தலைமறைவாகினர்.

இந்நிலையில், உளவு வாயிலாக கிடைத்த தகவலின் அடிப்படையில், கொள்ளையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 29 முதல் 43 வயதுக்கு உட்பட்ட ஆடவர்கள் கைது செய்யப்பட்டதாக கோத்தா பாரு மாவட்ட போலீஸ் தலைவர் வான் ருசைலன் வான் மாட் யூசோஃப் தெரிவித்தார்.

அவர்களிடமிருந்து 3 மோட்டார்சைக்கிள்கள், தலைக்கவசங்கள், ரொக்கம் முதலானவைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

விசாரணைக்கு உதவும் பொருட்டு, அவர்கள் அனைவரும் இம்மாதம் 25ஆம் தேதி வரையில் 7 நாள்களுக்கு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக வான் ருசைலன் கூறினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்