சாலை தடுப்பில் 419 சமான்கள் வெளியாக்கப்பட்டன

கோலாலம்பூர், மார்ச் 1 –

ஸ்கூடாய், ப்லாசா டோல் ஸ்கூடாய் அருகிலுள்ள வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் கடந்த புதன்கிழமை மேற்கொள்ளப்பட்ட ஓபி பெர்செப்பாடு லுவாரான் பெரோன்டா லெபு ராயா சோதனையின் போது 419 சமான்கள் வெளியாக்கப்பட்டன.

இந்த சோதனையின் போது சோன் செலாத்தான் 3 நெடுஞ்சாலையின் அமலாக்கப் பிரிவைச் சேர்ந்த 20 உறுப்பினர்கள் உட்பட மற்ற அதிகாரிகளும் ஈடுபட்டதாக புக்கிட் அமான் போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கத்துறையின் இயக்குநர் டத்துக் மொகமட் அஸ்மான் அஹ்மாட் சப்ரி தெரிவித்தார்.

ஓட்டுநர் உரிமம் இல்லாதது, அதிவேகம், காலாவதியான சாலை வரி, விவரக்குறிப்புகளின்படி இல்லாத பதிவு எண் ஆகிய குற்றங்கள் அடிப்படையில் 166 சமான்கள் வழங்கப்பட்ட வேளையில் அதிகளவில் எடை கொண்ட எட்டு லாரிகள் மற்றும் பல்வேறு சட்டவிரோத செயல்களின் கீழ் 253 சமான்கள் வெளியாக்கப்பட்டதாக மொஹமட் அஸ்மான் கூறினார்.

இந்நடவடிக்கையில் 11 இந்தோனேசிய, 12 இந்திய, 2 வங்காளதேசிய, 1 மியன்மார் மற்றும் பாகிஸ்தான் என 27 வெளிநாட்டினர்கள் கைது செய்யப்பட்டதாக மொஹமட் அஸ்மான் நேற்று ஓர் அறிக்கையில் விவரித்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்