23 இடங்களில் வெப்பநிலை அதிகரித்துள்ளன

கெடா, மார்ச் 1 –

கெடா, போக்கோக் செனா வில் நேற்று பிற்பகல் 4:50 மணிவரையில் வெப்ப அலை இரண்டாம் நிலையில் இருப்பதாக பதிவாகியுள்ளது. இந்த மூன்று நாட்களில் வெப்பத்தின் அளவு 37 முதல் 40 டிகிரி செல்சியஸை குறிப்பதாக மலேசிய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தீபகற்ப மலேசியாவில் 21 இடங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாகவுள்ளது. பெர்லிஸ், கெடா, பினாங்கு, பேராக், கோலாலம்பூர், சிலாங்கூர் மற்றும் பல பகுதிகள் இதில் அடங்குவதாக மெட்மலேசியா தெரிவித்துள்ளது.

சில இடங்களில் வெப்பத்தின் அளவு முதற்கட்ட நிலையில் இருப்பதுடன் 35 முதல் 37 டிகிரி செல்சியஸில் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளன.

முன்னதாக, மலேசியா தற்போது வடகிழக்குப் பருவமழையில் இறுதிக் கட்டத்தில் இருப்பதாக மெட்மலேசியா அறிவித்திருந்தது.

இத்தகைய நிலை பொதுவாகவே தீபகற்பத்தின் வடக்கு பகுதிகளில் குறைவான மழைப்பொழிவை ஏற்படுத்துவதுடன் வானிலை வழக்கத்தைவிட வெப்பமாகவும் வறண்டதாகவும் காணப்படும் என்று மெட்மலேசியா கூறியுள்ளது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்