சொந்த ஊரில் இருப்பதை போன்று வாழும் அந்நிய நாட்டவர்கள்

பண்டார் தாசேக் கெசுமா, பங்சபுரி பைடுரியில் உள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் ஒவ்வொரு தளத்திலும் 7 முதல் 10 வரையில் வெளிநாட்டினர்கள் குடியிருந்து வருவதாக அவ்விடத்தின் குடியிருப்பாளரான 70 வயதான குமார் தெரிவித்தார்.

அவ்விடத்தில் 80 சதவீதம் வெளிநாட்டவர்கள் குடியிருப்பதாகவும் அவர்கள் குடியிருக்கும் வீட்டை சொந்த ஊராகவே கருதி கொள்வதுடன் பல்வேறு சமூக பிரச்னைகளையும் விளைவிப்பதாக பொதுமக்கள் புகார் அளித்தனர்.

போதைப்பொருள் உட்கொள்ளுதல், மது அருந்தி பொதுமக்களுக்கு இடையூறு செய்தல், சண்டையிடுதல் போன்ற ஒழுக்கமற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவது குடியிருப்புவாசிகளின் பாதுகாப்பினை பாதிப்பதாக சிலர் பதிவிட்டனர்.

அப்பகுதியில் 400 வெள்ளி முதல் 800 வெள்ளி வரையில் ஒவ்வொரு தளத்திலும் அந்நியநாட்டவர்கள் வாடகைக்கு குடிபெயர்ந்து இருப்பதாக நேற்று இரவு 11 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையில் தெரியவந்துள்ளது.

ஒவ்வொரு வார இறுதியிலும் மாலை வேளையிலும் அதிகமான வெளிநாட்டவர்கள் அவ்விடத்தில் ஒன்றுக்கூடுவதை காண முடிவதாக 30 வயதுடைய Zainab விளக்கினார்.

மேலும் இச்சோதனையில் 561 ஆவணமற்ற வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்