சிங்கப்பூர் பிரஜைக்கு மரணத் தண்டனை நிலைநிறுத்தம்

புத்ராஜெயா, மே 17 –

தனது 7 வயது வளர்ப்பு மகனை மூன்று நாட்களுக்கு இடைவிடாமல் அடித்து கொன்ற குற்றத்திற்காக ஒரு சிங்கப்பூர் பிரஜைக்கு விதிக்கப்பட்ட மரணத் தண்டனையை கூட்டரசு நீதிமன்றம் இன்று நிலைநிறுத்தியது.

ஷவால் செனின் என்ற 47 வயதுடைய அந்த சிங்கப்பூர் பிரஜை, தனக்கு விதிக்கப்பட்ட மரணத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கும்படி செய்து கொண்ட விண்ணப்பத்தை மூவர் அடங்கிய நீதிபதிகள் குழுவினருக்கு தலைமையேற்ற நாட்டின் தலைமை நீதிபதி துன் தெங்கு மைமுன் துவான் மாட் தள்ளுபடி செய்தார்.

அந்த சிங்கப்பூர் பிரஜை, கடந்த 2008 ஆம் ஆண்டு டிசம்பர் 24 ஆம் தேதி ஜோகூர்பாரு, தம்போய் அருகில் தாமான் கோபேனா- வில் உள்ள Pulai View ஆடம்பர அடுக்கு மாடி வீட்டில் சிவகோர்ன் சுகுந்தா என்ற தனது வளர்ப்பு மகனை கொன்றதாக குற்றஞ்சாட்டுப்பட்டு இருந்தார்.

அவருக்கு கடந்த 2011 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஜோகூர் பாரு உயர் நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்தது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்