விரக்தியின் விளிம்பில் 4. 6 விழுக்காடு மலேசியர்கள்

புத்ராஜெயா, மே 17 –

மலேசிய மக்கள் தொகையில் பத்து லட்சம் பேர் அல்லது 4.6 விழுக்காட்டினர் மனமுடைந்த நிலையில் விரக்தியின் விளிப்பில் இருப்பதாக ஆய்வுகளில் தெரிய வந்துள்ளன.

தங்கள் வாழ்க்கையில் ஏதோ ஒரு பாதிப்பினால் அவர்கள் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாகி, வாழ்க்கையை முடித்துக்கொள்ளலாம் என்று எண்ணம் மேலோங்கும் அளவிற்கு மனதில் ஒரு பெரும் சுமையுடன் வாழ்ந்து வருவது தெரியவந்துள்ளது என்று 2023 ஆம் ஆண்டிற்கான தேசிய சுகாதாரம் மற்றும் நோயற்றத் தன்மை ஆய்வுகள் காட்டுகின்றன.

எந்தவொரு நோயினாலும் பாதிக்கப்படாமலேயே எதனையோ பறிகொடுத்தவர்களை போல் உடல் ரீதியாக தங்களை தாங்களே வருத்திக்கொண்டு இருக்கும் இவர்கள் பற்றிய விவர சேகரிப்பு அவசியமாகிறது என்று சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ ஷுல்கிப்ளி அகமது- டினால் தொடக்கி வைக்கப்பட்ட தேசிய சுகாதார ஆய்வு திட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்