சினமூட்டக்கூடிய 27 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பதிவுகள் அகற்றப்பட்டது

கோலாலம்பூர், மார்ச் 29-

இவ்வாண்டின் முதல் இரண்டு மாதங்களில் மட்டும் சமூக ஊடகங்களில் சினமூட்டுகின்ற வகையிலான உள்ளடகங்களைக் கொண்ட 27 ஆயிரத்து 115 பதிவுகள் அகற்றப்பட்டுள்ளதாக தொடர்பு பல்லூடக ஆணையம் MCMC தெரிவித்துள்ளது.

கடந்தாண்டு முழுவதும், மொத்தம் 35 ஆயிரத்து 490 பதிவுகள் அகற்றப்பட்டதாகவும் அவ்வாணையம் கூறியுள்ளது.

சமூக ஊடகங்கள் மற்றும் ஓவர் தி டாப் – OTT தளங்களில் தீங்கை விளைவிக்கக்கூடிய பதிவுகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக கூறிய தொடர்பு பல்லூடக ஆணையம், இனம், சமயம், மலாய் ஆட்சியாளர்கள் சார்ந்த 3R விவாகரங்களை தொட்டு வெறுப்பை விதைக்கக்கூடிய பேச்சுகளை உட்படுத்தி சுமார் ஈராயிரத்து 4 பதிவுகள் அகற்றப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளது.

மேலும், நாட்டிலுள்ள சமூகம் மற்றும் கழகங்களுக்கு மருட்டலை வழங்கக்கூடிய மோசடி, சட்டவிரோத விற்பனை, பொய் செய்தி முதலான பதிவுகளும் அகற்றப்பட்டதை அவ்வாணையம் சுட்டிக்காட்டிaயுள்ளது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்