சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்பட வேண்டும்

மலேசியாவில் வேலை வாங்கி தருவதாக கூறி, 171 வங்காளதேசத் தொழிலாளர்கள் தருவிக்கப்பட்டு, வேலை பெற்றுத் தராமல் கும்பல் ஒன்றினால் மோசடி செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் விசாரணை செய்வதற்கு அரசாங்கம் ஒரு சிறப்பு விசாரணைக்குழுவை அமைக்க வேண்டும் என்று மலேசிய மனித உரிமை ஆணையமான Suhakam கேட்டுக்கொண்டுள்ளது.

ஓர் உயர்மட்டக்குழுவினரை சிறப்பு விசாரணைக்குழுவில் இடம் பெறச் செய்வது மூலம், அந்நிய தொழிலாள்களை தருவிப்பதிலும், அவர்களுக்கு வேலை வாங்கித் தராமல் மோசடி செய்யப்படுவதற்கும் நடப்பு விதிமுறைகளில் உள்ள பலவீனங்கள் ஆராயப்பட்டு, களையப்படுவதற்கு இது போன்ற சிறப்பு விசாரணைக்குழு அவசியமாகும் என்று அந்த மனித உரிமை ஆணையம் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்