சிறாரைத் தாக்க முற்பட்ட முதலை சிக்கியது.

கோத்தா கினபாலு, மே 23-

சபா, புலாவ் காயா-விலுள்ள கம்போங் லோக் பாரு நீர் பகுதியில், சிறாரைத் தாக்க முற்பட்ட 3 மீட்டருக்கும் கூடுதலான நீளம் கொண்ட முதலையை அப்பகுதி வாழ் மக்கள் வெற்றிகரமாக பிடித்தனர்.

நேற்று மாலை மணி 4 வாக்கில், 200 கிலோகிராம் எடைக் கொண்ட அம்முதலையை அவர்கள் அனைவரும் பொறி வைத்து பிடித்ததாக, கோத்தா கினபாலு, பொது தற்காப்பு படையின் நடவடிக்கை பிரிவு அதிகாரி எஸ்ரா டேனியல் காண்டுய் தெரிவித்தார்.

முன்னதாக, சம்பந்தப்பட்ட சிறுவர் அங்குள்ள நீர் பகுதியில் குளித்துக்கொண்டிருந்த போது, அம்முதலை அவரை தாக்க முற்பட்டுள்ளது.

ஆயினும், அங்கிருந்து தப்பித்தோடிய அச்சிறுவர், அங்குள்ள குடியிருப்பாளர்களிடம் அது குறித்து தெரிவித்த பின்னர், அதனை பிடிக்கும் முயற்சியில் அவர்கள் களமிறங்கினர்.

பிடிபட்ட முதலை, பின்னர் சபா வனவிலங்கு துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டதாக எஸ்ரா டேனியல் காண்டுய் கூறினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்