சிறுமியைக் கொன்ற ஆடவருக்கு 35 ஆண்டுகள் சிறை; 12 பிரம்படிகள் விதிக்கப்பட்டது

கோலாலம்பூர், மே 23-

5 ஆண்டுகளுக்கு முன்பு, 4 வயதே நிரம்பிய சிறுமியைக் கொலை செய்த குற்றத்திற்காக, பொது தற்காப்பு படையின் முன்னாள் தன்னார்வளருக்கு, சிலாங்கூரிலுள்ள கிள்ளான் உயர்நீதிமன்றம் 35 ஆண்டுகள் சிறையையும் 12 பிரம்படிகளையும் தண்டனையாக விதித்து தீர்ப்பளித்தது.

முகமது சஸ்ரி முகமது தாஹா எனும் 41 வயதுடைய அவ்வாடவர், தன் மீதான குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதை அடுத்து, நீதிபதி நோர்லிசா ஓத்மான் அத்தீர்ப்பை வழங்கினார்.

சிறுமியைக் கொன்றது கடுமையான குற்றம் என்பதால், அவ்வாடவருக்கு படிப்பினையை வழங்கும் வகையில் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்.

அதனடிப்படையில், சாகும்வரை தூக்கிலிடும் தண்டனைக்கு பதிலாக தாம் அத்தண்டனையை விதித்தாக நோர்லிசா ஓத்மான் தமது தீர்ப்பில் கூறியுள்ளார்.

கடந்த 2019ஆம் ஆண்டு செப்டம்பர் 28ஆம் தேதி, மதியம் ஒரு மணி தொடங்கி மறுநாள் மதியம் ஒரு மணி வரையில், கிள்ளானிலுள்ள கம்போங் சுங்காய் உடாங் எனுமிடத்தில் ஜாஹிரா சோபியா அஹ்மத் முயிஸ் எனும் சிறுமிக்கு மரணம் விளைவித்ததாக, முகமது சஸ்ரி மீதான குற்றச்சாட்டில் கூறப்பட்டிருந்தது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்