துப்பாக்கிகளுடன் பிடிபட்ட இஸ்ரேலிய பிரஜை குற்றத்தை மறுத்தார்

கோலாலம்பூர், ஏப்ரல் 12-

ஆறு துப்பாக்கிகள் மற்றும் 158 தோட்டாக்களுடன் பிடிபட்ட ஓர் இஸ்ரேலிய பிரஜை, இன்று காலை 9:30 மணியளவில் கோலாலம்பூர், சேசியேன் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டப்பட்டார்.

நீதிபதி தஸ்னிம் அபு பக்கர் முன்னிலையில், பிரான்ஸ் கடப்பிதழைக் கொண்டுள்ள அந்த ஆடவருக்கு எதிராக மொழிப்பெயர்ப்பாளர் ஆங்கிலத்தில் குற்றச்சாட்டை வாசித்த போது அக்குற்றத்தை அவர் ஒப்புக் கொள்ளவில்லை.

கடந்த மார்ச் 26ஆம் தேதி முதல் மார்ச் 28ஆம் தேதி வரையில் ஜாலான் அம்பாங்கிலுள்ள Four Seasons ஹோட்டலில் 38 வயது ஆவிதான் ஷலோம் என்கிற அவ்வாடவர் துப்பாக்கிகளையும் தோட்டாக்களையும் வைத்திருந்ததாக அவர் மீது குற்றச்சாட்டப்பட்டது.

குற்றம் என்று நிரூபிக்கப்பட்டால் மரணத் தண்டனை விதிக்க வகை செய்யும் 1971 ஆம் ஆண்டு சுடும் ஆயுதங்கள் சட்டம், 7 ஆவது பிரிவின் கீழ் அவ்வாடவர் குற்றஞ்சாட்டப்படுவார். இதனிடையே, சம்பந்தப்பட்ட ஆடவருக்கு ஜாமின் வழங்க மறுத்த நீதிபதி, அவ்வழக்கின் மறு செவிமடுப்பை மே 21ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.

இதற்கு முன்பு, இச்சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மேலும் 14 பேர் மீதான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அந்நபர்கள் தடுப்புகாவலில் நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் தேசிய போலீஸ் படைத் தலைவர் டான் ஸ்ரீ ரசாருதீன் ஹுசைன் நேற்று கூறியிருந்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்