பிரதமர் அன்வார் மீது அதிருப்தி, கோலா குபு பாரு இடைத்தேர்தலில் இந்தியர்கள் பேரிக்காதான் நசியனாலை ஆதரிப்பர்

பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 11-

அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் கோலா குபு பாரு சட்டமன்ற இடைத்தேர்தலில், இந்தியர்களில் குறைந்தது 60 விழுக்காட்டினரின் ஆதரவை டிஏபி பெற்றால் மட்டுமே அந்த தொகுதியை நிலைநிறுத்திக்கொள்ள முடியும்.

சீனர்களின் வாக்குகள் முழுமையாக டிஏபி-க்கு கிடைத்தாலும் மலாய்க்காரர்களின் வாக்குகள் பிரியக்கூடும். அத்தகைய சூழலில் வெற்றி பெற போகும் வேட்பாளரை நிர்ணயிப்பவராக இந்திய வாக்காளர்களே விளங்குவார்கள் என சிலாங்கூரைச் சேர்ந்த பெயர் குறிப்பிட விரும்பாத சட்டமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

அண்மையக் காலமாக, இந்தியர்கள் கொஞ்சம் கொஞ்சமாக பேரிக்காதான் நசியனால் பக்கம் செல்ல தொடங்கியிருப்பதை டிஏபி அறிந்துள்ளது. இந்திய சமூகத்தினர் அக்கூட்டணிக்கு செல்வதற்கு பல காரணங்கள் உள்ளன.

குறிப்பாக, அச்சமூகத்தினரை குறிப்பிடுவதற்காக சொல்லக்கூடாத சொல்லை பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பயன்படுத்தி, அவர்களின் மனதை புண்பட செய்துள்ளார். அதுமட்டுமின்றி, இந்திய சமூக உருமாற்ற பிரிவு- மித்ரா-வை அவர் கையாண்ட விதம், அமைச்சரவையில் இந்திய பிரதிநிதிகளுக்கு வாய்ப்பளிக்காதது முதலானவற்றை குறிப்பிடலாம்.

நடப்பு ஒருமைப்பாட்டு அரசாங்கத்தின் செயல்பாட்டில் இந்தியர்கள் மனநிறைவையும் மகிழ்ச்சியையும் கொண்டிருக்கவில்லை.

அதையெல்லாம் கருத்தில் கொண்டு பார்க்கையில், பிரதமருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், இந்திய சமுகத்தினர் பேரிக்காதான் நசியனால் கூட்டணிக்கு எதிர்ப்பு வாக்குகளாக செலுத்துவார்கள் என தாம் கருதுவதாக அவர் கூறினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்