சிலாங்கூர் FC தற்காப்பு ஆட்டக்காரரின் வீட்டில் கொள்ளை

சிலாங்கூர், மே 23-

அண்மையக் காலமாக, நாட்டில் விளையாட்டாளர்களுக்கு எதிரான தாக்குதல்களும் அசம்பாவிதங்களும் அதிகரித்த வண்ணம் உள்ளன.

அதன் நீட்சியாக தற்போது, சிலாங்கூர் FC தற்காப்பு ஆட்டக்காரர் அஹ்மத் குஜாய்மி பியி வீட்டில் கொள்ளை சம்பவம் நிகழ்ந்துள்ளது.

நேற்று மாலை 2 மணியளவில் பயிற்சியில் கலந்துக்கொள்ள தாம் வீட்டை விட்டு வெளியேறிய பின்னர், அக்கொள்ளை சம்பவம் நிகழ்ந்ததாக குஜாய்மி பியி கூறியுள்ளார்.

இரவு மணி 9 அளவில் வீடு திரும்பிய போது, வீட்டின் முன்புறம் மற்றும் பின்புறமுள்ள வேலியின் கதவுகள் திறந்திருந்ததை கண்டு சந்தேகமடைந்த அவர், பின்னர், யமாஹா வகை மோட்டார்சைக்கிள், பல்வகை கைப்பைகள், கடப்பிதழ் முதலானவை காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு முன்பு, சிலாங்கூர் FC ஆட்டக்காரர் பைசால் ஹலிம் மீது ஆசிட் எரிதிராவகம் வீசி தாக்குதலும் திரங்கானு FC ஆட்டக்காரர் அக்யார் ரஷித்-ட்டை தாக்கி கொள்ளை சம்பவமும் நிகழ்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்