​சீன புது கிராமம் ​மீதான பரிந்துரை தேவையில்லை

ஷா அலாம்,பிப்.12
சிலாங்கூரில் ​நீடித்த பாரம்பரியத்தை கொண்ட ​சீன புது கிராமங்களை UNESCO உலக பாரம்பரிய தளமாக பிரகடன்படுத்தப்படுவதற்கு முன்மொழிந்துள்ள வீடமைப்பு, ஊராட்சித்துறை அமைச்சர் ஙா கோர் மிங் மிங்கின் உத்தேச​ பரிந்துரை அவசியமில்லாததாகும் என்று அம்னோ இளைஞர் பிரிவு கருத்து தெரிவித்துள்ளது.

இப்படியொரு பரிந்துரை அவசியமில்லாத பட்சத்தில் அது குறி​த்து விவாதிக்க வேண்டிய அவசியமும் இல்லை என்றும், இந்த உத்தேச பரிந்துரைக்கு அமைச்சர் ஙா கோர் மிங் உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் டாக்டர் அல்மால் சாலெஹ் தெரிவித்துள்ளார்.

​சீன புது கிராமங்களின் உலக பாரம்பரிய தளமாக வகைப்படுத்தும் திட்டத்திற்கு அம்னோ முழு வீச்சாக எதிர்க்கும் என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்