சுடு நீர் ஊற்றப்பட்ட மாற்றுத் திறனாளிக்கும், அந்த மாதுவிற்கும் பிரச்னை இருந்துள்ளது

ஜார்ஜ்டவுன், ஏப்ரல் 22-

பினாங்கில் வீடமைப்புப்பகுதி ஒன்றில் மின்தூக்கியில் மாது ஒருவரினால் சுடு நீர் தாக்குதலுக்கு ஆளான மாற்றுத் திறனாளிக்கும், அந்த மாதுவிற்கும் நீண்ட காலமாகவே தகராறு இருந்துள்ளது என்பது விசாரணையில் தெரியவிந்துள்ளது.

ஒரே வீடமைப்பு பகுதியை சேர்ந்தவர்களான மன நலிவு கொண்ட அந்த 33 வயது ஆடவருக்கும், 39 வயதுடைய அந்த சீன மாதுவிற்கும் கடந்த மூன்று, நான்கு ஆண்டுகளாக தகாராறு இருந்துள்ளது. அதன் காரணமாகவே இந்த தாக்குதல் நடந்துள்ளதாக பூர்வாங்க விசாரணையில் என்று பாராத் டாயா மாவட்ட போலீஸ் தலைவர் கமாருல் ரிசால் ஜெனல் தெரிவித்துள்ளார்.

எனினும் இவ்விவகாரத்தை தாங்கள் இன்னமும் விசாரணை செய்து வருவதாக இன்று நடைபெற்ற செய்தியாளரகள் கூட்டத்தில் அவர் இதனை தெரிவித்தார்.

கடந்த வாரம் வெள்ளிக்கிழமை காலை 9.20 மணியளவில் பினாங்கு, பயான் லெப்பாஸ், ஜாலான் ராஜாவலி-யில் உள்ள அடுக்குமாடி வீடமைப்புப் பகுதியில் மின்தூக்கியில் ஏறுவதற்கு முற்பட்ட சோலை ராஜ் என்ற மாற்றுத் திறனாளியை, மின்தூக்கியில் இருந்த சீன மாது ஒருவர், சுடு நீர் வீச்சு தாக்குதல் நடத்தியதில் அந்த மாற்றுத் திறனாளி காயம் அடைந்தார்.

இச்சம்பவம் திடீரென்று ஏற்பட்டதைப் போல் இருந்தாலும் ஒரே வீடமைப்புப்பகுதியை சேர்ந்த இருவரும் ஒருவருககொருவர் நன்று அறிமுகமானவர்கள் ஆவார். ஆனால், அவர்களுக்குள் தகராறு இருந்துள்ளது என்று கமாருல் ரிசால் தெரிவித்தார்.

எனினும் இந்த தாக்குதலை நடத்திய மாதுவை மனநல சோதனைக்கு உட்படுத்துவதா? என்பது குறித்து போலீசார் பரிசீலனை செய்து வருவதாக கமாருல் ரிசால் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்