நஜீப் விடுவிக்கப்பட்டால் லஞ்ச ஊழல் நியாயப்படுத்தப்பட்டு விடும்

ஷாஹ் அலாம், ஏப்ரல் 22-

மலேசியா ஒரு “வாழைப்பழ” குடியரசாக மூழ்க நேரிடலாம் எச்சரிக்கிறார் முன்னாள் SPRM தலைமை ஆணையர் லதீபா கோயா.

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கை வீட்டுக்காவலில் வைப்பது தொடர்பாக எடுக்கப்பட்ட முடிவு, மாமன்னருடையது என்று கூறியிருக்கும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிமை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM-மின் முன்னாள் தலைமை ஆணையர் லதீபா கோயா இன்று கடுமையாக சாடினார்.

இந்த முடிவில் அமைச்சரவை மற்றும் சட்டத்துறை தலைவர் உட்பட டத்தோஸ்ரீ அன்வார் தலைமையிலான அரசாங்கத்திற்கும் பொறுப்பு இருக்கிறது என்று லதீபா கோயா
குறிப்பிட்டார்.

நஜீப்பை வீட்டுக்காவலில் வைப்பதற்கு மாமன்னர் முடிவு செய்ததாக பிரதமர் அன்வார் கூறுகிறார். ஆனால்,அந்த முடிவு அமைச்சரவை மற்றம் சட்டத்துறை தலைவர் உட்பட மன்னிப்பு வாரியத்தின் முடிவாகும் என்ற லதீபா கோயா வாதிட்டடார்.

இந்த முடிவுக்கு முழுக்க முழுக்க அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டுமே தவிர மாமன்னர் அல்ல என்பதையும் லதீபா கோயா தெளிவுபடுத்தினார்.

நஜீப்பை வீட்டுக்காவலில் வைப்பது மீதான விண்ணப்பத்திற்கு மாமன்னரே முடிவு செய்துள்ளதாகவும், அந்த முடிவு குறித்து அரசாங்கம் கேள்வி எழுப்ப முடியாது என்றும் அன்வார் கூறியதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளிவந்துள்ள செய்தி தொடர்பில் லதீபா கோயா எதிர்வினையாற்றினார்.

கைதி ஒருவரை வீட்டுக்காவலில் வைப்பது என்பது நாட்டின் சட்டத்தில் இல்லாத ஒன்றாகும் என்பதுடன் கூட்டரசு அரசியலமப்புச் சட்டம் 42 ஆவது விதி மற்றும் சிறைச்சாலை சட்டம் ஆகியவற்றில் எந்த இடத்திலும் அவ்வாறு வலியுறுத்தப்படவில்லை என்பதையும் ஒரு சட்ட வல்லுநரான லதீபா கோயா விளக்கினார்.

கோடிக்கணக்கான வெள்ளி லஞ்ச ஊழலில் சம்பந்தப்பட்டு, ஒன்பது நீதிபதிகளால் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டுள்ள நஜீப் விடுவிக்கப்பட்டால், அவர் புரிந்த லஞ்ச ஊழல் நடவடிக்கைகள் நியாயப்படுத்தப்பட்டு விடும், அவை சட்டப்பூர்வமானதாகி விடும்.

அவ்வாறு நடந்தால், நாடு அரசியல் நிலைத்தன்மையை இழக்க நேரிடலாம். பின்னர் பொருளாதாரம் சீர்குலைந்து, ஒரு பரம ஏழை நாடாக மலேசியா ஒரு “வாழைப்பழ குடியரசாக” மிதக்கும் நிலை ஏற்படலாம் என்று லதீபா கோயா எச்சரித்துள்ளார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்