செகாமாட்டில் அபாய நிலையை எட்டும் 3 ஆறுகள்

ஜோகூர், செகாமாட், சுங்கை லெனிக் லாடாங் சா ஆறு அபாய நிலையை எட்டுவதாக ஜோகூர் மாநில நீர்ப்பாசன, வடிகால் துறை தகவல் வெளியிட்டுள்ளது. தற்போது அந்த ஆற்றில் நீர் மட்டம் 5.59 மீட்டராகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், கம்போங் செரி மக்மூர் இல் உள்ள சுங்கை தங்கா இல் நீர் மட்டம் அபாய நிலையைக் கடந்த 4 மீட்டராகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

செகாமாட், பூலோ கசாப்இல் உள்ள மூவார் ஆற்றின் நீர் மட்டத்தில் மாற்றம் ஏதும் ஏற்படாமல் 7.94 மீட்டர் எனும் அபாய நிலையிலேயே உள்ளது.

இதனிடையே, கூலாய், கம்போங் முர்னி ஜெயாவில் உள்ள சுங்கை சிக்கு ஆற்றில் நீர் மட்டம் அபாய நிலையில் இருந்து 17.53 மீட்டராக முறைந்திருப்பதாகவும் .

கோத்தா திங்கி, கம்போங் மாவாய் யில் உள்ள சுங்கை அயேர் ஈத்தாம் இல் உள்ள ஆற்றில் நீர் மட்டம் 3.11 ஆகக் குறைந்த்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெர்சிங், கூலாய், கோத்தா திங்கி, ஜோகூர் பாரு ஆகிய வட்டாரங்களில் இடியுடன் கூடிய மழை பெஊம் என மலேசிய வானிலை ஆய்வு மையமான Met-Malaysia அறிவித்துள்ளது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்