KK MART-ட்டின் சர்ச்சைக்குரிய காலுறை விவகாரத்தை படிப்பினையாக கொள்வீர்! – ZAHID HAMIDI வலியுறுத்து

ஸ்லிம் ரிவேர், மார்ச் 20 –

”அல்லா” எனும் சொல் பொறிக்கப்பட்ட காலுறைகளை விற்பனை செய்ததற்காக KK MART கடை எதிர்நோக்கியுள்ள சர்ச்சையை நாட்டிலுள்ள பேரங்காடிகள் ஒரு படிப்பினையாக கொள்ள வேண்டும்.

மீண்டும் அது போன்ற தவறுகளைப் புரியக்கூடாது என துணைப்பிரதமர் டத்துக் ஶ்ரீ அகமாட் சாஹிட் ஹமிடி வலியுறுத்தினார்.

தனது தவற்றிற்காக KK Mart தரப்பு மன்னிப்பு கோரியிருந்தாலும், அது சாதாரணமானது அல்ல. உணர்ச்சி வசப்பட செய்யும் அவ்விவகாரம், 3R எனப்படும் இனம், சமயம், மலாய் ஆட்சியாளர் பிரிவின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.

அந்த சர்ச்சைக்குரிய விவகாரத்தை தவறாக அர்த்தப்படுத்திக்கொள்ளும் போக்கையும், பொறுப்பற்ற தரப்பினர் அவர்களுக்கு சாதகமாக அதனை பயன்படுத்திக்கொள்வதை தவிர்க்கவும், அதற்கு விரைந்து தீர்வுக்காணப்பட வேண்டும் என அம்னோ தலைவருமான டத்துக் ஶ்ரீ டாக்டர் அகமாட் சாஹிட் ஹமிடி DATUK SERI Dr Ahmad Zahid Hamidi கூறினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்