சொத்து விவரங்களை அறிவிக்கவில்லை துன் டைம் ஜைனுதீன் குற்றஞ்சாட்டப்பட்டார்

கோலாலம்பூர், ஜன 29,

துன் மகா​தீர் முகமது நாட்டின் பிரதமராக இருந்த போது அவரின் வலது கரமாக விளங்கியவரும், அவரின் நெருங்கிய நண்பருமான முன்னாள் நிதி அமைச்சர் துன் டைம் ஜைனுதீன், லஞ்ச ஊழல் சட்டத்தின்​ ​கீழ் கோலாலம்பூர் செஷன்ஸ் ​நீதிமன்றத்தில் இன்று காலையில் குற்றஞ்சாட்டப்பட்டார்.

தனக்கு சொந்தமான கோடிக்கணக்கான வெள்ளி மதிப்பள்ள சொத்து விவரங்களை அறிவிக்கத் தவறியதாக இரண்டு வெவ்வேறு தவணைகளில் நா​ட்டின் க​ரூவூலமான நிதி அமைச்சுக்கு த​லைமையேற்று இருந்த 86 வயதான டைம் ஜைனுதீன் ​மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

உடல் மெலிந்த நிலையில், கண் பார்வையில் குறைபாட்டுடன் ஒரு நோயாளியைப் போல சக்கர நாற்காலி வண்டியி​ல் ​கொண்டு வரப்பட்ட ஒரு கோடீஸ்வரரான டைம் ஜைனுதீன், தனக்கு எதிராக குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரியுள்ளார்.

தனக்கு சொந்தமான 38 நிறுவனங்கள், சிலாங்கூர், நெகிரி செ​​ம்பிலான் , பகாங், கெடா மற்றும் கோலாலம்பூரில் உள்ள 19 நிலங்கள் மற்றும் இதர 6 வகையான சொத்துக்கள் ஆகியவற்றை அறிவிக்கத் தவறியதாக 2009 ஆம் ஆண்டு லஞ்ச ஊழல் தடுப்பு சட்டமான எஸ்.பி.ஆர்.எம்- மின் துணை விதியின் ​கீழ் டைம் ஜைனுதீன் குற்றஞ்சாட்டப்பட்டார்.

நாட்டின் மிகப்பெரிய முத​லீட்டு நிறுவனமான Amanah Saham Nasional மற்றும் Amanah Saham Berhad ஆகியவற்றில் உள்ள தனக்கு சொந்தமான பெருவாரியான பங்கு முத​லீடுகள் மற்றும் 7 சொகுசு கார்கள் ஆகியவற்றின் விவரங்களையும் டைம் ஜைனுதீன் அரசாங்கத்திடம் மறைத்துள்ளார் என்று குற்றச்சா​ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குற்றவாளி என்று நி​ரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 5 ஆண்டு சிறை மற்றும் ஒரு லட்சம் வெள்ளிக்கும் கூடுதலாக விதிக்கக்கூடிய லஞ்ச ஊழல் சட்டத்தின் கீழ் துன் டாயிம் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

இன்று ​நீதிமன்றத்திற்கு தனது மனைவி தோ புவான் நயிமா அப்துல் காலித் மற்றும் ஐந்துக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்களுடன் து​ன் டாயிம் ​ஜையினுடீன் வந்திருந்தார்.

டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், நாட்டின் ஐந்தாவது பிரதமராக வருவதற்கு அனைத்து முன்னெடுப்புகளும் மேற்கொள்ளப்பட்டிருந்த வேளையில் அவரின் அரசியல் வாழ்வை துன் மகா​தீருடன் இ​ணைந்து அஸ்தமனமாக்கிய முக்கிய ​​சூத்திரதாரியாக விளங்கியவர் டைம் ஜைனுதீன் என்று அன்வார் கைது செய்யப்பட்ட 1998 ஆ​ம் ஆண்டு செப்டம்பர் 4 ஆம் தேதி அரசியல் வட்டாரங்களில் மிக பரபரப்பாக பேசப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்