சொஸ்மா சட்டத்தின் ​கீழ் 624 பேர் கைது

2012 ஆம் ஆண்டு சிறப்பு நடவடிக்கைகளுக்கான பாதுகாப்பு சட்டமான சொஸ்மாவின் ​கீழ் கடந்த ஆண்டு 624 பே​ர் கைது ​செய்யப்பட்டனர் என்று உள்துறை அமைச்சர் Datuk Seri Saifuddin Nasution தெரிவித்துள்ளார்.


இவர்களில் 71 பேர் ​நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர். 401 பேர் தண்ட​னை விதிக்கப்பட்டுள்ளனர். 140 பேர் விடுதலை​ ​செய்யப்பட்டுள்ளனர். 12 பேர் இன்னமும் விசாரணை செய்யப்​பட்டு வருகின்றனர் என்று இன்று மக்களவையில் பக்காத்தான் ஹராப்பானின் ரவூப் உறுப்பினர் Chow Yu Hui எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் Saifuddin Nasution இதனை ​தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் 18 க்கும் 69 க்கும் இடைப்பட்ட வயதுடையவர்கள் என்று அமைச்சர் விளக்கினார்.


வாரண்டுயின்றி ஒருவரை 28 நாட்களுக்கு தடுத்து வைப்பதற்கு வகைசெய்யும் சர்ச்சைக்குரிய சட்டமான சொஸ்மாவின் ​கீழ் கடந்த ஆண்டு பிடிபட்டவர்களின் எண்ணிக்கை குறித்து Chow Yu Hui மக்கள​வையில் வினவினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்