சோதனையில் 158 நபர்களை போலீசார் கைது செய்தனர்

குவாந்தான், ஏப்ரல் 03-

பகாங்கில் உள்ள ஆறு பிரதான இடங்களில் மேற்கொள்ளப்பட்ட ஓப் நாடா காஸ் திடீர் சோதனையின் போது 128 வெளிநாட்டு பெண்கள் உட்பட 158 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கடந்த பிப்ரவரி 27 ஆம் தேதி முதல் மார்ச் 31 ஆம் தேதி வரையில் மேற்கொண்ட இச்சோதனையில் 20 முதல் 56 வயதுடைய நபர்களை குவாந்தான், டெமெர்லோஹ், பென்த்தொங், ரவூப், லிப்பிஸ், ஜெராண்டுட் ஆகிய பகுதிகளில் கைது செய்யப்பட்டதாக பகாங் போலீஸ் தலைவர் டத்தோ ஸ்ரீ யஹாயா ஒத்மான் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட 21 ஆண்களும் மற்றும் 8 உள்ளூர் பெண்களும் பொழுதுபோக்கு மையங்கள், உணவகங்கள், மசாஜ் நிலையங்களின் உரிமையாளர்களாவர் என்று யஹாயா ஒத்மான் கூறினார்.

வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்யும் வெளிநாட்டு பணிப்பெண்களை வேலைக்கு அமர்த்திய ஏழு பொழுதுபோக்கு வளாகங்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக யஹாயா ஒத்மான் அறிவித்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்