நிந்தனைச் சட்டத்தில் திருத்தங்களை செய்வது அரசாங்கத்தின் பிற்போக்குத்தனத்தை குறிக்கிறது! வழக்கறிஞர் என். சுரேந்திரன் சாடினார்

பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 03-

1948 ஆம் ஆண்டு நிந்தனை சட்டத்தை அரசாங்கம் உடனடியாக அகற்ற வேண்டும். அதில் திருத்தங்களை செய்து, அச்சட்டத்தை நிலைத்திருக்கச் செய்வது அவசியமற்றது என மனித உரிமை அமைப்பான லவ்யேர்ஸ் போர் லிபெர்ட்டி வலியுறுத்தியுள்ளது.

எதிர்க்கட்சியாக இருந்த போது, அந்த சர்ச்சைக்குரிய சட்டத்தை அகற்றுவதாக பக்காத்தான் ஹாராப்பான் வாக்குறுதி அளித்திருந்ததைச் சுட்டிக்காட்டிய லவ்யேர்ஸ் போர் லிபெர்ட்டி அமைப்பின் ஆலோசகர்நிந்தனைச் சட்டத்தில் திருத்தங்களை செய்வது அரசாங்கத்தின் பிற்போக்குத்தனத்தை குறிக்கிறது! வழக்கறிஞர் என். சுரேந்திரன் சாடினார், தற்போது, அதில் திருத்தம் செய்ய அரசாங்கம் முடிவெடுத்துள்ளதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அது பிற்போக்குத்தனமான செயல் எனவும் சாடினார்.

இதற்கு முந்தைய காலங்களில், மாற்று கருத்து உடையவர்களை களையெடுக்கவும் அரசியல் நோக்கத்திற்காகவும் நிந்தனை சட்டம் பயன்படுத்தப்பட்டது. எது தேச விரோத போக்குகளில் அடங்கும் என்பதற்கான எவ்வித வரையறையும் இன்றி நிந்தனை சட்டம் பயன்படுத்தப்பட்டது.

நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லும் முயற்சியில், மனித உரிமைக்கு முரணான அந்த நிந்தனை சட்டத்தில் திருத்தம் செய்வதைவிட, அது முற்றிலுமாக அகற்றப்படுவதே ஏற்புடையதாக இருக்கும் எனவும் நிந்தனைச் சட்டத்தில் திருத்தங்களை செய்வது அரசாங்கத்தின் பிற்போக்குத்தனத்தை குறிக்கிறது! வழக்கறிஞர் என். சுரேந்திரன் சாடினார் கூறினார்.

அண்மையில், நிந்தனை சட்டத்தில் திருத்தங்களை செய்ய அமைச்சரவை கூட்டம் இணக்கம் தெரிவித்துள்ளதாக உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ நெகேறி சைபியூட்டின் நசுட்டின் இஸ்மாயில் கூறியிருந்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்