நான் மக்களுக்காக குரல் எழுப்புகிறேன்.

 

பெட்டாலிங் ஜெயா, ஜன – 7,

 

பாரிசான் நேசனல் உறுப்புக் கட்சியான மசீச, “தவறாக வழிநடத்தப்பட்டது” என்று டிஏபியின் த்ணைத் தலைவர் தெரசா கோக்கின் கூற்றை, மசீசவின் தலைவர் வீ கா சியோங் சாடியுள்ளார்.

 

மேலும், டிஏபி கட்சியின் பொதுச் செயலாளர் அந்தோணி லோக்கை வீ கா சியோங் தாக்கும் வகையில் பேசி இருப்பதாக தெரேசா கோக் கூறி இருப்பதையும் அவர் மறுத்துள்ளார்.

 

குறிப்பாக அந்தோணி லோக்கின் தலைமையிலான போக்குவரத்து அமைச்சு சம்பந்தப்பட்ட மக்களைப் பாதிக்கும் பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்டு தாம் விமர்சனங்களை முன்வைத்ததாகவும் வீ கா சியோங் தெளிவு படுத்தினார்.

 

தாம் போக்குவரத்து அமைச்சராக இருந்தபோது, மைஜேபிஜே செயலியை ஜேபிஜே தொடங்கச் சொன்னது, ஆனால் தகவல் கசிவை ஏற்படுத்தக்கூடிய அதன் பாதுகாப்பு அம்சங்கள் தமக்கு உடன்பாடு இல்லாததால் அதனை மறுத்துவிட்டதாக வீ கா சியோங் குறிப்பிட்டார்.

அமைச்சர் மாறியவுடன் அந்தச் செயலி நடப்புக்கு வந்தது. மக்கள் எதிர்மறையாகக் கருத்துரைத்ததன் விளைவாக, தாமே நேரடியாக குரல் எழுப்புவதாகவும் சுட்டிக் காட்டினார்.

தமது விமர்சனத்தை ஜேபிஜே தரப்பு ஏற்றுக் கொண்டதோடு அந்த செயலியில் சில மாற்றங்களைச் செய்கிறார்கள்.

மாமன்னர் ஆணை இட்டது போல், பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராகிம்மின் ஒற்றுமை அரசாங்கத்திற்கு ஆதரவளித்து வந்தாலும், எல்லாவற்றுக்கும் உடன்படும் கட்சியாக மசீச இருக்காது என்றார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்