ஜெலிமீன்கள் ஆயிரக்கணக்கில் இறந்து கிடந்தன

கோத்தா கினாபாலு, மார்ச் 28 –

சபா, கோத்தா கினபாலு, குவாலா பென்யு கடலோரப்பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஜெலி மீன்கள் இறந்து, கொத்து கொத்தாக கரை ஒதுங்கி கிடந்தது இன்று காலையில் கண்டு பிடிக்கப்பட்டது.

சுட்டெரிக்கும் வெளியில் கடலில் வெப்ப நிலை அதிகரிப்பு காரணமாக அரிய வகை மீன் வகைகளில் ஒன்றான ஜெலி மீன்கள் இறந்த இருக்கக்கூடும் என்று சபா மீன் வள இலாகா கூறுகிறது.

கடலிலும் , ஆழ்கடலிலும் உள்ள பவளப்பறைகள் திட்டுகளின் மத்தியில் வசிக்கும் இவ்வகை மீன்கள் இறந்ததற்கு வேறு காரணங்கள் எதுவும் இருக்க முடியாது என்று மீன் வள இலாகா தெரிவித்துள்ளது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்