நான்கு நீர் தேக்கங்களில் நீரின் மட்டம் மோசமடைகிறது

பினாங்கு, மார்ச் 28 –

நாட்டில் நான்கு பிரதான நீர் அணைக்கட்டுகளில் நீரின் மட்டம் குறைந்து, நிலைமை மோசடைந்து வருகிறது என்று நாட்மா எனப்படும் தேசிய பேரிடர் நிர்வாக மேலாண்மை அறிவித்துள்ளது.

ஜோகூர்பாருவில் உள்ள எம்பாங்கான் செம்போரோங் பாராட் , பினாங்கில் உள்ள எம்பாங்கான் அயேர் ஹீத்தாம் , கெடா உள்ள எம்பாங்கான் பி.ஸ் பாடாங் சாகா மற்றும் எம்பங்கான் மாலுட் ஆகிய நான்கு நீர் அணைக்கட்டுகளில் நீரின் மட்டம் பெருவாரியாக குறைந்து இருப்பது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என்று நட்மா கூறுகிறது.

அந்த நீர் தேங்கங்களில் நீரின் மொத்த கொள்ளளவில் 31 விழுக்காடு முதல் 35 விழுக்காடு வரை மட்டுமே இருப்பதாக அந்த அரசாங்க ஏஜென்சி தெரிவித்துள்ளது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்