டான்ஸ்ரீ முகைதீன் யாசினின் மருமகனை நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டுவதற்கு தயார் நிலையில் ஸ்.பி.ர்.ம்

கோலாலம்பூர். பிப்ரவரி 22 –

முன்னாள் பிரதமரும், பெரிக்காத்தான் நேஷனல் தலைவருமான டான்ஸ்ரீ முகைதீன் யாசின் மருமகனை நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டுவதற்கு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான ஸ்.பி.ர்.ம் தாயார் நிலையில் இருப்பதாக அதன் தலைமை ஆணையர் தான் ஶ்ரீ அசாம் பாகி அறிவித்துள்ளார்.

ஒரு வர்த்தகரான டான்ஸ்ரீ முகைதீன் யாசினின் மருமகனுக்கு எதிரான நம்பிக்கை மோசடி குற்றச்சாட்டு மீதான விசாரணை முடிவடைந்து, அறிக்கையும் தயாரிக்கப்பட்டு விட்டது. ஆனால், அவர் தற்போது எங்கு இருக்கிறார் என்பது தெரியவில்லை என்று அசாம் பாகி குறிப்பிட்டுள்ளார்.

இன்று கோலாலம்பூர், உலக வாணிப மையத்தின் டேவான் துன் ஹுசைன் ஒன் மண்டபத்தில் சான்றிதழ் அளிக்கப்பட்ட நேர்மைமிகுந்த அதிகாரிகளுக்கான மாநாட்டை தொடக்கி வைத்தப்பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் அஸாம் பாக்கி மேற்கண்டவாறு கூறினார்.

கடந்த ஆண்டு தெரிவிக்கப்பட்ட தகவலின்படி, தேசிய ஒருங்கிணைந்த குடிநுழைவு முறை தொடர்பான கட்டமைப்பில் தனது அதிகாரத்தை பயன்படுத்தி, அரசு குத்தகையை பெற்றுள்ளதாக முகைதீன் மருமகன் முகமது அட்லன் பெர்ஹான் க்கு எதிராக கூறப்பட்டது.

அவரை பிடிப்பதற்கு மலேசிய போலீசார், அனைத்துலக போலீசாரின் உதவியை நாடியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்