பாடு தரவு தளத்தில் குறைந்த பதிவுகள்

கோலாலம்பூர், பிப்ரவரி 22 –

அரசாங்கத்தின் உதவிகள் மற்றும் சலுகைத் திட்டங்களை இலக்குக்கு உரிய மக்களுக்கு கொண்டு சேர்ப்பதற்காக அவர்களின் சுய மற்றும் குடும்ப விவரங்களை பதிவு செய்து கொள்வதற்கு தொடங்கப்பட்ட மத்திய தரவுத் தளமான பாடு வில் தங்களை பதிவு செய்து கொண்டுள்ள மக்களின் எண்ணிக்கை மிக குறைவாக இருப்பதாக தொடர்புத்துறை அமைச்சர் பஹ்மி பட்ஸ்லி தெரிவித்துள்ளார்.

இதன் தொடர்பில் மக்களின் சுய விவரங்களை சேகரிப்பதற்கு 217 அரசாங்க இலாகாக்கள் மற்றும் ஏஜென்சிகளின் தரவுத் தளங்களை அரசாங்கம் பயன்படுத்தவிருப்பதாக அமைச்சர் பஹ்மி பட்ஸ்லி குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமினால் தொடக்கி வைக்கப்பட்ட பாடு முதன்மை தரவு தளத்தில் கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதி வரையில் 34 லட்சத்து 30 ஆயிரம் பேர் மட்டுமே தங்களை பதிவு செய்து கொண்டு இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த எண்ணிக்கையானது, மலேசியாவின் மக்கள் தொகையில் வெறும் 10 விழுக்காடு மட்டுமே என்று பஹ்மி பட்ஸ்லி தெளிவுபடுத்தியுள்ளார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்