டிரெய்லர் லோரி கவிழ்ந்தது, வாகனப் போக்குவரத்து நெரிசல்

ஈப்போ,மார்ச் 2 –

வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் 292.1 ஆவது கிலோமீட்டரில் கோப்பேங் கை நோக்கி, சிம்பாங் பூலாய் அருகில் மாவு மூட்டைகளை ஏற்றி வந்த டிரெய்லர் லோரி ஒன்று குடை சாய்ந்ததில் அந்த நெடுஞ்சாலையில் வாகனப் போக்குவரத்து நிலைக்குத்தியது.

இன்று காலை 9.00 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தினால் அந்த முதன்மை நெடுஞ்சாலையின் வலது வழித்தடம் மூடப்பட்டது. இதனால், சுமார் 23 கிலோ மீட்டம் தூரம் வரை வாகனப் போக்குவரத்து நிலைக்குத்தியது என்பதுடன் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது என்று வடக்கு தெற்கு நெடுஞ்சாலை வாரியமான ப்லஸ் மலேசியா பெர்ஹாட் தெரிவித்துள்ளது.

மதியம் 12.10 மணியளவில் அந்த கனரக வாகனத்தை அகற்றும் பணித் தொடங்கியது. இச்சம்பவத்தில் அந்த டிரெய்லர் லோரியின் ஓட்டுநருக்க நெஞ்சுப்பகுதியில் அடிப்பட்டதுடன் கால், இடிபாடுகளுக்கு இடையில் சிக்கிக்கொண்டதாக பேரா மாநில தீயணைப்பு, மீட்புப்படை உதவி இயக்குநர் சபரோட்சி னோர் அகமாட் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்