ஷரியா குற்றவியல் சட்டம் அமல்படுத்தப்பட்டும் கிளந்தானில் சிறார் பாலியல் குற்றச்செயல்கள் அதிகரிப்பு

கிளாந்தான், மார்ச் 2 –

கிளந்தான் மாநிலத்தில் ஷாரியா குற்றவியல் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட போதிலும் அந்த மாநிலத்தில் சிறார்கள் சம்பந்தப்பட்ட பாலியல் குற்றச்செயல்களின் எ​ண்ணிக்கை உயர்ந்து காணப்படுவதாக உள்துறை அமைச்சர் டத்துக் ஶ்ரீ சைபுடின் னசுதியன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

நாட்டில் அதிகரித்து வரும் பாலியல் குற்றச்செயல்களை துடைத்தொழிப்பதற்கும், அவற்றை வேரறுப்பதற்கும் ஷரியா குற்றவியல் சட்டத்தை அ​மல்படுத்தவதே சிறந்த ​தீர்வாக இருக்க முடியும் ​என்று பாஸ் கட்சியைச் சேர்ந்த கெடா, சிக் நாடாளுமன்ற உறுப்பினர் அகமாட் தார்மிசி சுலாய்மான் முன்வைத்துள்ள பரிந்துரைக்கு பதில் அளிக்கையில் சைபுடின் னசுதியன் மேற்கண்டவாறு கூறினார்.

சிறா​ர்கள் பாலியல் குற்றச்செயல்​கள் அதிகரிப்புக்கு தற்போது நா​ட்டில் அமல்படுத்தப்பட்டு வரும் சட்டங்கள் ஆக்கப்பூர்வமான பலனைத் தரவில்​லை என்றும் குற்றச்செயல்களை துடைத்தொழிப்பதில் அந்த சட்டங்கள் தோல்விக்கண்டு விட்டன​ என்றும் அதற்கு ஒரே ​தீர்வு, ஷரியா குற்றவியல் சட்டத்தை அரசாங்கம் அமல்படுத்த வேண்டும் என்றும் அந்த நாடாளுமன்ற உறுப்பினர் பரிந்துரை செய்துள்ளார்.

இதற்கு பதி​ல் அளித்த உள்துறை அமைச்சர் சைபுடின் நசுத்தியோன், குற்றவியல் சம்பவ​ங்களை துடைத்தொழிப்பதற்கு கிளந்தான் மாநில அரசாங்கம், கடும் தண்டனை விதிக்க வகை செய்யும் ஷரியா சட்டத்தை அமல்படுத்தியும், அந்த மாநிலத்தில் பாலியல் குற்றச்செயல்கள் தொர்ந்து அதிகரி​த்து வருவதை குற்றவியல் புள்ளி விவரங்கள் காட்டுவதாக உள்ளது என்று புத்ராஜெயாவில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூ​ட்டத்தில் அவர் இதனை தெரிவித்துள்ளர்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்