டுரியான் லேபிள்களைப் பயன்படுத்தி போதைப்பொருள் கடத்தல்

தாவாவ், மார்ச் 18 –

டுரியான் லேபிள்களை பயன்படுத்தி பேக்கேஜ் செய்யப்பட்ட 10.79 கிலோகிராம் methamphetamine போதைப்பொருளை சபா, மலேசிய சுங்கத்துறை வெற்றிகரமாக கைப்பற்றியுள்ளது.

தாவாவ் மலேசிய சுங்கத்துறை அதிகாரிகள் அளித்த தகவலின் அடிப்படையில் கடந்த மார்ச் 9 ஆம் தேதி Jalan Bakau -வில் உள்ள சேவை வளாகத்தில் திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டு குறிப்பிடப்பட்ட போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக சபா, மலேசிய சுங்கத்துறையின் உதவி இயக்குநர் டத்துக் மொகமாட் னாசிர் டெராமான் தெரிவித்தார்.

மீன்பிடி பொருட்கள் என பெயரிடப்பட்டுள்ள பெட்டிகளில் மீது வைக்கப்பட்டிருந்த “168 Freeso-Dried Durian” என்கிற உணவு பொட்டலங்களை பயன்படுத்தி சட்டவிரோதமாக பொருட்களை மறைப்பதே சிண்டிகேட்டின் பிரதான நடவடிக்கையில் ஒன்றாகும் என்று மொகமாட் னாசிர் கூறினார்.

இச்சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளை தொடர்ந்து விசாரனைக்கு உதவும் வகையில் சம்பந்தப்பட்ட kurier சேவை நிறுவனத்தின் மேலாளரை கைது செய்யப்பட்டதாக மொகமாட் னாசிர் மேலும் விவரித்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்