107 வெளிநாட்டவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்

இஸ்கன்டார் புத்ரி யில் உள்ள மூன்று மாடி கடையில் உள்ள பொழுதுபோக்கு மையத்தில் மேற்கொண்ட திடீர் சோதனையில் இரண்டு ஆண்கள் உட்பட 44 வெளிநாட்டவர்களை மாநில குடிநுழைவுத்துறை கைது செய்துள்ளனர்.

இதில் தாய்லாந்து நாட்டை சேர்ந்த 40 பெண்கள், ஒரு இந்தோனேசிய மற்றும் மியன்மார், உட்பட 25 மற்றும் 45 வயதுடைய சீனா, வங்காளதேசத்தை சேர்ந்த இரண்டு ஆண்கள் ஆகியோர் அதிக கால அவகாசத்தில் தங்கியிருத்தல் மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12.10 மணியளவில் வெளிநாட்டு பிரஜைகள் ஒழுக்கக்கேடான செயல்களில் ஈடுபடுவதாக பொதுமக்களிடமிருந்து கிடைக்க பெற்ற புகாரை தொடர்ந்து அவ்விடத்தில் சோதனை மேற்கொள்ளப்பட்டதாக நம்பப்படுகிறது.

ஆண் வாடிக்கையாளர்களை மகிழ்விப்பதற்காக அவ்விடத்தில் சேவை பெண்கள் ‘Flower Girls’ ஆக பணியாற்றுவதாக மாநில குடிநுழைவுத்துறை இயக்குநர் பஹாருடின் தாஹிர் கூறினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்