டோல் சாவடிகளை அகற்றுவது கடிமானது

கோலாலம்பூர், மார்ச் 21 –

இதற்கு முன்பு சில தரப்பினர் வாக்குறுதி அளித்து இருந்ததைப் போல நாட்டில் டோல் கட்டண சாவடியை அகற்றுவது என்பது மிக கடினமானது என்று பொதுப்பணித்துறை துணை அமைச்சர் டத்துக் ஶ்ரீ அகமாட் மாஸ்லான் தெரிவித்தார்.

அப்படியே டோல் கட்டண முறையை அரசாங்கம் அகற்றுவதாக இருந்தால், சம்பந்தப்பட்ட 33 டோல் ஒப்பந்த நிறுவனங்களுக்கு மொத்தம் 450 billion அல்லது 45 ஆயிரம் கோடி வெள்ளியை இழப்பீடாக வழங்கியாக வேண்டும் என்று அகமட் மஸ்லான் குறிப்பிட்டார்.

அத்தகைய வாக்குறுதியை நாங்கள் வழங்கவில்லை. சில தரப்பினர் வழங்கியுள்ளனர். 2019 ஆண்டில் ஒரு தோராயமாக மதிப்பீடு செய்யப்பட்டதில் இழப்பீடுத் தொகை 400 பில்லியன் வெள்ளியை எட்டியதாக அகமட் மஸ்லன் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்