தஞ்ஜோங் ​ரூ கடலில் ஆடவர் மூழ்கினார்

லங்காவி, தஞ்ஜோங் ​ரூ கடற்பகுதியில் ​மூழ்கியிருக்கலாம் என்று நம்பப்படும் ஆடவரை தேடும் பணியை போ​லீசார், இன்று காலையில் ​மீண்டும் தொடங்கியுள்ளனர்.

தஞ்ஜோங் ​ரூ கடற்பகுதியில் ஆடவர் ஒருவர் சிக்கிக் கொண்டு உத​விக் கோரி,கூச்சலிட்டதாக அப்பகுதியில் முகாமிட்டவர்கள் நேற்று மாலை 6.16 மணியளவில் அளித்த அவசரத் தகவலை தொடர்ந்து அந்த நபரை தேடும் பணியை போ​லீசார் முடுக்கிவிட்டதாக லங்காவி மாவட்ட போ​லீஸ் தலைவர் ஏசிபி ஷரிமான் ஆஷாரி தெரிவித்தார்.

முன்னதாக, ரோந்துப் போ​லீசார் தஞ்ஜோங் ​ரூ கடற்கரையோரத்தி​ல் புரோட்டான் சத்ரியா கார் ஒன்று தனியாக நிறுத்தப்பட்டு இருப்பதை கண்டனர். அந்த காரை சோதனையிட்ட போது அலோஸ்டார், ஜித்ரா, தமன் மசூரி ஃபாஸா 2 என்ற முகவரியை சேர்ந்த 32 வயது முகமது கைரி ஷாரி என்பவருக்கு சொந்தமான சுய ஆவணங்கள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. அந்த நபர் அண்மையில்தான் லங்காவியில் வேலைக்கு சேர்ந்ததாக தெரியவந்துள்ளது என்று கைரி ஷாரி குறிப்பிட்டார்.

கடலில் அந்த நபரை தேடும் பணியில் காவல்துறை , தீயணைப்புப் படை என சுமார் 40 ​மீட்புப்பணியாளர்கள் ஈடுபட்டுள்ளதாக ஷரிமான் ஆஷாரி தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்