தடுப்புக்காவல் மரணம், அரசாங்கம் தோல்வி

புத்ராஜெயா, மே 15 –

ஏழு ஆண்டுகளுக்கு முன்பு, போர்ட்டிக்சன் தடுப்புக்காவலில் இறந்த எம். சேகர் என்பவரின் மனைவிக்கும், மகனுக்கும் 4 லட்சத்து 50 ஆயிரம் வெள்ளியை இழப்பீடாக வழங்குவதற்கு உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்வதில் அரசாங்கம் இன்று தோல்விக் கண்டது.

உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யுமாறு அரசாங்கம் செய்து கொண்ட மேல்முறையீட்டை மூவர் அடங்கிய நீதிபதிகள் குழுவினருக்கு தலைமையேற்ற அப்பீல் நீதிமன்ற நீதிபதி லீ ஸ்வீ செங் தள்ளுபடி செய்தார்.

உயர் நீதிமன்ற நீதிபதி அளித்துள்ள தீர்ப்பில் தலையிடுவதற்கான அவசியம் இருப்பதாக இவ்வழக்கில் பார்க்க முடியவில்லை என்று லீ ஸ்வீ செங் தமது தீர்ப்பில் தெரிவித்தார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 17 ஆம் தேதி, போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட சேகர், அடுத்த இரண்டாவது நாளில் தாம் தடுத்து வைக்கப்பட்டு இருந்த போர்ட்டிக்சன் தடுப்புக்காவலில் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சேகரின் உடலில் ரத்தக்காயங்கள் காணப்பட்டதைத் தொடர்ந்து அவரின் மரணத்திற்கு போலீசாரும், அரசாங்கமும் பொறுப்பேற்க வேண்டும் என்று கோரி அவரின் மனைவி எம். விமலா தேவி மற்றும் மகன் தசரதன் ஆகியோர் இழப்பீடு கோரி இந்த சிவில் வழக்கை தொடுத்து இருந்தனர்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்