பாடாங் செராய், செலுவாங், ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலயம் நிலைநிறுத்தப்பட வேண்டும்

கெடா, மே 15 –

கெடா, பாடாங் செராய், சுங்கை செலுவாங் தோட்டத்தில் சைம் டார்பி நிறுவனத்திற்கு சொந்தமான நிலத்தில் கடந்த 1953 ஆம் ஆண்டு முதல் அருள்பாலித்து வரும் ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலயம், அதே இடத்தில் நிலைநிறுத்தப்பட வேண்டும் என்று ஆலயத் தலைவர் கிஷோர் குமார் கிருஷ்ணன் தலைமையிலான நிர்வாகத்தின் கேட்டுக்கொண்டனர்.

சைம் டார்பிக்கு சொந்தமான நிலப்பகுதிகள், KTPC எனப்படும் Kulim Technology Park Coperation நிறுவனத்திற்கு விற்கப்பட்டு விட்டதாக கூறி, தொழில் பேட்டைக்கு வழிவிடும் வகையில் அந்த ஆலயத்தை அவ்விடத்திலிருந்து அகற்றக்கோரி, சம்பந்தப்பட்ட நிறுவன த்திடமிருந்த இரண்டு முறை நோட்டீஸ் பெற்று விட்டதாகவும் ஆலயத் தலைவர் கிஷோர்குமார் தெரிவித்தார்.

ஆலயம் உடனடியாக அகற்றப்படவில்லை என்றால் உடைப்படும் அபாயம் இருப்பதாகவும் அந்த நிறுவனம் எச்சரித்துள்ள வேளையில் அந்த பழமை வாய்ந்த ஆலயம் பாதுகாக்கப்பட வேண்டிய அவசியத்தை அவர் வலியுறுத்தியுள்ளார்.

குறிப்பாக ஆலயத்தின் அருகாமையிலேயே மாற்று நிலம் வழங்கப்படுமானால் ஆலயத்தை இடம் மாற்றம் செய்வதில் தங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை என்று கிஷோர் குமார் செய்தியாளர்களிடம் விவரித்தார்.

முன்னதாக, இவ்வாலயப் பிரச்னைக்கு தீர்வு காணும் நோக்கில் கெடா மந்திரி பெசார் முகமட் சனூசி முகமட் நோரின் கவனத்திற்கு அவரின் சிறப்பு அதிகாரி குமரேசன் மூலம் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக கிஷோர் குமார் குறிப்பிட்டார்.

அத்துடன் கெடா மாநில இந்தியர்களுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் வோங் சியா ஜென், ஊராட்சி மன்ற உறுப்பினர் மாரித்து ஆகியோரின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டதாக அவர் விளக்கினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்