தனியார் மருத்துவனையில் 30 நிமிடம் காத்திருந்ததற்கு 11 வெள்ளி 60 காசு கட்டணமா?

சிராம்பான், பிப்ரவரி 29 –

சிரம்பானில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றிருந்த போது ஆபத்து அவசர வேளைக்கான அறையில் 30 நிமிடம் தாம் காத்திருந்ததற்காக 11 வெள்ளி 60 காசு கட்டணத்தை விதித்து இருக்கும் அந்த மருத்துவமனையின் செயல்குறித்து, நோயாளி ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

காத்திருந்த நேரத்திற்கு 11 வெள்ளி 60 காசு கட்டணமின்றி, நோயாளி கவனிப்பு போக்குவரத்து செலவு என்று 34 வெள்ளி கட்டணத்தை அந்த தனியார் மருத்துவமனை, சிகிச்சைக்கான கட்டண பில்லில் சேர்த்து இருப்பது தம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளதாக சிரம்பானை சேர்ந்த பெயர் குறிப்பிட விரும்பாத நோயாளி ஒருவர் புகார் தெரிவித்தார்.

சிகிச்சைக்காக கட்டணத்தை மட்டும் வசூலிக்க வே​ண்டிய தார்​மீக கடப்பா​ட்​டில் உள்ள தனியார் மருத்துவமனைகள், இப்படி அவசியமின்றி கண்மூடித்தனமாக கட்டணம் விதிப்பது குறித்து சுகாதார அமைச்சு உடனடியாக ஆராய வேண்டும் என்று அந்த நோயாளி கே​ட்டுக்கொண்டார்.

ஓர் ஊசி செலுத்திக்கொள்வதற்கு அந்த தனியார் மரு​த்துவமனைக்கு சென்ற போது இச்சம்பவம் நிகழ்ந்ததாக குறிப்பிட்டுள்ள அந்த நோயாளி,ஆபத்து அவசர வேளையில் அந்த அறையில் காத்திருப்பதற்கு ஒவ்வொரு நிமடத்திற்கும் கட்டணம் விதிக்கப்படும் என்பது, தமக்கு முன்கூட்டியே தெரிந்திருந்தால் அந்த அறைக்கு செல்லாமல், அவர்கள் அழைக்கும் வரையில் தம்மால் வெளி​யிலேயே காத்திருந்திருக்க முடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனியார் மருத்துவமனைகள், நோயாளிகளின் சுகாதார கடப்பாட்டு உணர்வை கொண்டிருக்க வேண்டுமே தவிர பகல் கொள்ளை புரியும் கூடாரமாக மாறிவிடக்கூடாது என்று அவர் கேட்டுக்கொண்டார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்