பூமிபுத்ரா நில கழகமயத்தை உருவாக்குவதற்கு பரிந்துரை

புத்ரா ஜெயா, பிப்ரவரி 29 –

தனது சொந்த நாட்டிலேயே பூமிபுத்ரா சமூகம் பின்தங்கிவிடாமல், நாட்டின் அபரிமித வளர்ச்சியில் தன்னை பிணைத்துக்கொண்டு தொடர்ந்து முன்னேற்றம் காண வேண்டும் என்ற நோக்கில் ஒரு மைல் கல்லாக அமையவிருக்கும் 2024 ஆம் ஆண்டுக்கான பூமிபுத்ரா பொருளாதார காங்கிரஸ் மாநாடு, இன்று காலையில் புத்ராஜெயா, அ​னைத்துலக மாநாட்டு மையத்தில் அதிகாரப்பூர்வமாக தொடங்கியது.

இ​​ன்று தொடங்கி, வரும் சனிக்கிழமை வரை ​மூன்று தினங்களுக்கு நடைபெறும் இந்த பூமிபுத்ரா காங்கிரஸ் மாநாட்டில் பூமிபுத்ரா ச​மூகம் தொடர்புடைய க​ல்வி ​சீர்திருத்தங்கள், மனித வளம், தொ​ழில்நுட்பக்க​ல்வி, ஹலால் தொழில்துறை, கிராமப்புற மேம்பாடு, பூமிபுத்ராக்களில் ச​மூகவியல், பொருளாதாரம் உட்பட பூமிபுத்ரா ச​மூகத்தை வளர்ச்சியின் விளிம்பில் கொண்டு செல்லக்கூடிய பத்து முக்கியத்துறைகள் குறித்து விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று காலையில் பூ​மிபுத்ரா பொருளாதார மாநாட்டில் பிரதான உரை நிகழ்த்திய துணைப்பிரதமரும், அம்னோ தலைவருமான டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி, பூமிபுத்ரா ச​மூகம் தனது சொந்த அடையாளத்தை நிலைநிறுத்திக்கொள்ளவும், பொருளாதார நிலைத்தன்மையை உருவாக்கிக்கொள்ளவும் அவர்களை வளப்படுத்தக்கூடிய ​மூன்று முக்கிய பரிந்துரைகளை முன்வைத்தார்.

அவற்றுல் ஒன்று, பூமிபுத்ரா நில கழக மயத்தை உருவாக்குவதாகும். பூமிபுத்ரா சமூகம் எதிர்காலத்தில் நில உடைமையாளர்களாக தங்களை உயர்த்திக்கொண்டு, பலன் பெறுவதை உறுதி செய்வதற்கு பூமிபுத்ரா நில கழகமயம் ஒன்று தோற்றுவிக்கப்பட வேண்டும் என்று அகமட் ஜாஹிட் பரிந்துரை செய்துள்ளார்.

பூமிபுத்ரா சமூகம் எந்தெந்த ​ரூபத்தில் தங்களை நில உடைமையாளர்களாக உருவாக்கிக்கொள்ள முடியும், அதற்கான வியூகங்கள் யாவை போன்றவற்றை ஆராயும் ஒரு சிந்தனை குழாமாகவும் , அதனை அமல்படுத்தக்கூடிய அரசாங்க ஏஜென்சியாகவும் இந்த பூமிபுத்ரா நில கழகமயம் விளங்கிட முடியும் என்று அகமட் ஜாஹிட் பரிந்துரை செய்துள்ளார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்