தமிழ் ஊடகவியலாளர்களுடன் அமைச்சர் ஸ்டீவன் சிம் சந்திப்பு

கோலாலம்பூர், மார்ச் 7 –

மனித வள அமைச்சுக்கும், தமிழ் ஊடகவியலாளர்களுக்கும் இடையில் சிறந்த பிணைப்பையும், புரிந்துணர்வையும் ஏற்படுத்தும் நோக்கில் மனித வள அமைச்சர் ஸ்திவ் சிம் , விருந்தோம்பலுடன் கூடிய சந்திப்பு ஒன்றை கடந்த திங்கட்கிழமை, இரவு, கோலாலம்பூர், ஜாலான் ஈப்போவில் உள்ள முன்னணி உணவகம் ஒன்றில் நடத்தினார்.

இந்த விருந்து உபசரிப்பில் மனித வள அமைச்சர் ஸ்திவ் சிம் வுடன் அவரின் சிறப்புப் பணிகளுக்கான அதிகாரி டிக்கம் லௌடர்ஸ் , கண்ணன் தங்கராசு, மலாக்கா, காடெக் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் G. சாமிநாதன் ஆகியோருடன் தமிழ்ப்பத்திரிகைகளின் ஆசிரியர்கள், மின்னல் பண்பலை செய்தியாளர்கள், ஓன்லைன் தமிழ்ச்செய்தி ஊடகங்களின் பொறுப்பாளர்கள், நிருபர்கள் கலந்து சிறப்பித்தனர்.

மக்களுக்கும், அரசாங்கத்திற்கும் இடையே ஒரு பாலமாக ஊடகங்கள் முக்கிய பங்காற்றுவதால், மனித வள அமைச்சுக்கு ஓர் அமைச்சராக தாம் தலைமையேற்றப்பின்னர் ஊடகவியாலளர்களை சந்தித்து, அவர்களுடன் நல்லதொரு பிணைப்பை ஏற்படுத்திக்கொள்ளும் நோக்கில் தமிழ் ஊடகவியாளர்களுடன் சந்திப்பு நடத்துவது மிக முக்கியம் என்று தாம் கருதியதாக அமைச்சர் Steven Sim தெரிவித்தார்.

தமிழ் ஊடகவியலாளர்கள், சமூகத்தை உயர்த்துவதற்கான வழிகள் , அவர்களின் பிரச்னைனைய முன்னிலைப்படுத்துதல், மக்களின் நல்வாழ்வுக்கான ஆலோசனைகள் முதலியவைற்றை வழங்க வேண்டும் என்று இந்த விருந்தோம்பலில் அமைச்சர் ஸ்திவ் சிம் கேட்டுக்கொண்டார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்