தமிழ், சீன தாய்மொழிப்பள்ளகளை மறுசீரமைக்கும் திட்டத்தை கல்வி அமைச்சு கொண்டிருக்கவில்லை

கோலாலம்பூர், மார்ச் 11 –

தமிழ், சீன தாய்மொழிப்பள்ளிகள் மீதான அமைப்பு முறையை மறுசீரமைக்கும் திட்டத்தை கல்வி அமைச்சு கொண்டிருக்கவில்லை என்று அதன் அமைச்சர் பட்லினா சைடெக் தெரிவித்தார்.

தாய்மொழிப் பள்ளிகளின் அமைப்பு முறை குறித்து எந்தவொரு நடவடிக்கை மேற்கொள்வதாக இருந்தால்,அது 1996 ஆம் ஆண்டு கல்வி சட்டத்தில் நிர்ணயிக்கப்பட்டுள்ள அடிப்படையில் மட்டுமே மேற்கொள்ள முடியும் என்று பட்லினா சைடெக் குறிப்பிட்டார்.

அதற்கு முன்னதாக, தாய்மொழிப்பள்ளிகளின் கருத்துகள் கண்டயறிப்படும். ஆனால், எந்தவொரு சீரமைப்பு நடவடிக்கையாக இருந்தாலும் அது கல்விச் சட்டத்தை அ டிப்படையாக கொண்டே அமைந்து இருக்கும் என்று அவர் விளக்கினார்.

தமிழ், சீனப்பள்ளிகள் கல்விச்சட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. அந்த நிலைப்பாட்டில் கல்வி அமைச்சு உறுதியாக இருப்பதாக அவர் விவரித்தார்.

நாடு முழுவதும் உள்ள 8 ஆயிரத்திற்கு மேற்பட்ட பள்ளிகளில் தாய்மொழிப்பள்ளிகள் 1,800 க்கும் மேற்பட்டவையை உள்ளடக்கியிருப்பதாக பட்லினா சைடெக் விளக்கினார்.
2024/2025 புதிய கல்வியாண்டு தொடங்கிய நிலையில் இன்று திங்கட்கிழமை கோலலங்காட்டில் உள்ள சௌஜானா புத்ரா தேசிய தொடக்கப்பள்ளிக்கு வருகை புரிந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் இதனை தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்