17 பிரதான சாலைகள் வரும் ஞாயிற்றுக்கிழமை மூடப்படும்

கோலாலம்பூர், மார்ச் 1 –

ஒ.சி.பி.சி சைக்கிள் நிகழ்வினை முன்னிட்டு வருகின்ற ஞாயிற்றுக்கிழமை தலைநகரைச் சுற்றியுள்ள பிரதான 17 சாலைகள் மூடப்பட்டு, பின் காலை 6 மணி முதல் 9:30 மணி வரையில் கட்டங்கட்டமாக திறக்கப்படும்.

42 கிலோமீட்டர் தொலைத்தூரம் வரையில் குறிப்பிடப்பட்ட நிகழ்விற்காக சாலைகள் மூடப்படும் என்று கோலாலம்பூர் காவல்துறைத் தலைவர் டத்துக் அலாவுடின் அப்துல் மஜிட் தெரிவித்தார்.

ஜாலான் ராஜா, ஜாலான் கினாபாலு ,ஜாலான் கூச்சிங் , ஜாலான் சுல்தான் இஸ்மாயில் முதல் டத்தோ ஓன் வரையிலான வழித்தடங்கள் அனைத்தும் தற்காலிகமாக மூடப்படும் என்று டத்துக் அலாவுடின் கூறினார்.

ஜாலான் துன் பேராக் கிலிருந்து ஜாலான் சுல்தான் இஸ்மாயில் வரையிலும், ஜாலான் சுல்தான் இஸ்மாயில் லிருந்து ஜாலான் துன் பேராக் வரையிலும் பாதைகள் போலீசாரின் கண்காணிப்பில் இருக்கும் என்று மேலும் அவர் விவரித்தார்.

இந்த நிகழ்வின் போது போக்குவரத்து அமலாக்க மற்றும் புலனாய்வுத்துறையைச் சேர்ந்த 110 போலீஸ் அதிகாரிகள் பணியில் ஈடுபடவுள்ளனர் என்று டத்துக் அலாவுடின் குறிப்பிட்டார்.

சாலை நெரிசலை தடுப்பதற்கு பொதுபோக்குவரத்து சேவைகளை பயன்படுத்தி பயணிகள் பயணிக்க வலியுறுத்துவதாக அவர் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்