தலைமை பயிற்சியாளர் யார்? தோனியை வைத்து காய் நகர்த்த பிசிசிஐ திட்டம்?

இந்தியா, மே 21-

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் வரும் டி20 உலகக் கோப்பை தொடர் உடன் முடியும் நிலையில் புதிய பயிற்சியாளருக்கான தேடலில் தற்போது தோனியின் பெயர் அடிபடுகிறது.

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக பதவி வகித்து வந்த ராகுல் டிராவிட் ஆசிய கோப்பையை வென்று கொடுத்துள்ளார். ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் இந்திய அணி இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்தது. இந்த நிலையில் தான் வரும் டி20 உலகக் கோப்பை தொடர் உடன் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான ராகுல் டிராவிட்டின் பதவிக் காலம் முடிகிறது.

இதையடுத்து புதிய பயிற்சியாளருக்கான தேடலில் பிசிசிஐ தீவிரமாக களமிறங்கியது. இதற்கான பட்டியலில் ரிக்கி பாண்டிங், ஸ்டீபன் பிளெமிங் ஆகியோரது பெயர் அடிபட்டது. மேலும், மீண்டும் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு ராகுல் டிராவிட் விண்ணப்பிக்க மறுத்துவிட்டார். இவரைப் போன்று விவிஎஸ் லட்சுமணனும் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து சிஎஸ்கே அணியின் பயிற்சியாளரான ஸ்டீபன் பிளெம்மிங்கை அணுகிய போது அவர் மறுப்பு தெரிவித்திருக்கிறார். இந்திய அணியில் சீனியர் வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி, ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் இன்னும் ஓரிரு ஆண்டுகளில் தங்களது ஓய்வு முடிவை அறிவிக்க வாய்ப்பிருக்கிறது.

இதன் காரணமாக இளம் வீரர்களை வழிநடத்த சிறந்த பயிற்சியாளர் இந்திய அணிக்கு தேவை. அதற்கு சிஎஸ்கேயின் பயிற்சியாளர் தான் சரியான தேர்வாக இருப்பார் என்று பிசிசிஐ கருதி தோனி மூலமாக அணுக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக சிஎஸ்கே அணியின் பயிற்சியாளராக பிளெமிங் இருக்கிறார்.

இந்திய அணியின் பயிற்சியாளராக பிளெமிங் ஒப்புக் கொண்டால் இந்திய அணியுடன் 10 மாதங்கள் செலவிட வேண்டி வரும். மேலும், சிஎஸ்கே அணியுடன் 2 மாதங்கள் செலவிட வேண்டி வரும். அதோடு குடும்பத்துடன் நேரம் செலவிட முடியாமல் போய்விடும். இதன் காரணமாக ஸ்டீபன் பிளெமிங் இந்திய அணியின் பயிற்சியாளராக வருவதற்கு மறுப்பு தெரிவிக்கிறார் என்று சொல்லப்படுகிறது. தோனி மூலமாக அவரை சம்மதிக்க வைக்க பிசிசிஐ திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்