தாக்குதலை தொடர்ந்து சிங்கப்பூரில் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டது

Johor, Ulu Tiram போலீஸ் நிலையத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இரண்டு போலீஸ்காரர்கள் கொல்லப்பட்ட தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து, சிங்கப்பூரில் சோதனை சாவடிகள் உட்பட பாதுகாப்பு நடவடிக்கைகள் வலுப்படுத்தப்பட்டுள்ளன.

இதில், ரோந்து பணிகள் அதிகரிக்கப்படுவதுடன் சுற்றுலா பயணிகள் மற்றும் போக்குவரத்து மீது கடுமையான சோதனைகள் மேற்கொள்ளப்படும் என்று சிங்கப்பூர் உள்துறை அமைச்சகம் (MHA) அறிவித்திருந்தது.

இதனால், பயணிகள் சோதனை சாவடிகளில் அதிகளவில் நேரத்தை செலவிடக்கூடும் என்பதுடன் குடிநுழைவு தொடர்பான நடவடி‌க்கைகளிலும் பயனர்களின் வாகனங்கள் வழக்கத்திற்கு மாறாக, சற்று தாமதமாக செல்லும் என்று அது தெரிவித்துள்ளது.

மேலும், சுற்றுப்பயணிகள் சிங்கப்பூர் அல்லது வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளும் போது எல்லா நேரத்திலும் விழிப்புணர்வுடன் இருப்பதுடன் சந்தேகிக்கக்கூடிய நபர்கள் அல்லது செயல்பாடுகள் கண்டறியப்பட்டால் உடனடியாக காவல்துறைக்கு தெரிவிக்க வேண்டும் என்று MHA ஓர் அறிக்கையில் கேட்டுக் கொண்டது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்