20 சட்டவிரோத குடியேறிகள் கைது செய்யப்பட்டுள்ளன

Selangor, Sabak Bernam – மில் உள்ள ஒரு வீட்டில் மேற்கொண்ட திடீர் சோதனையின் போது கடல் வழியாக குடியேறிய கடத்தல் கும்பலின் நடவடிக்கைகள் அம்பலமானது.

இன்று நள்ளிரவு 1.30 மணியளவில் புக்கிட் அமான் குற்றப் புலனா‌ய்வுத்துறையின் அதிகாரிகள் மற்றும் ஆட்கடத்தல் தடுப்பு பிரிவின் D3 அதிகாரிகள் மேற்கொண்ட Op Pintas Transit Migran சோதனையின் போது, மொத்தம் 20 indonesia குடியேறிகள் கைது செய்யப்பட்டதாக புக்கிட் அமான் D3 பிரிவின் தலைமை உதவி இயக்குநர், Senior Asisten Komisioner Soffian Santong தெரிவித்தார்.

பல்வேறு குற்றங்களின் அடிப்படையில் 24 க்கும் 42 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்நபர்கள் கைது செய்யப்பட்டதாக Soffian Santong ஓர் அறிக்கையில் இன்று கூறினார்.

சம்பந்தப்பட்ட வீடு, மலேசியாவிலிருந்து கடல் வழியாக வெளியேறி நுழைவதற்கு குடியேறிகளுக்கு ஒரு போக்குவரத்து இடமாகவும் தங்கும் இடமாகவும் அமைந்துள்ளதாக அவர் தகவல் வெளியிட்டார்.

நாட்டில் சட்டவிரோதமாக குடியேறும் நபர்களை கண்டறியப்படுவதற்கு இச்சோதனை மேற்கொள்ளப்பட்டதுடன் கைது செய்யப்பட்ட அந்நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று Soffian Santong மேலும் விளக்கினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்