மாணவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக கடையின் உரிமையாளர் மீது குற்றச்சாட்டு

ஓர் ஆண் மாணவரை இரண்டு வெவ்வேறு இடங்களில் பாலியல் பலாத்காரம் செய்ததாக பல்பொருள் கடையின் உரிமையாளர் ஒருவர் Muar Sesyens நீதிமன்றத்தில் இன்று குற்றச்சாட்டப்பட்டார்.

31 வயது Muhammad Tarmizi Omar என்ற அந்த கடையின் உரிமையாளர், நீதிபதி Abu Bakar Manat முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட போது அக்குற்றத்தை அவர் ஒப்புக் கொள்ளவில்லை.

குற்றம் என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 20 ஆண்டுகள் சிறை மற்றும் ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் ஒரு பிரம்படி விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 14 (B) பிரிவின் கீழ் அவர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

கடந்த ஆண்டு நவம்பர் முதல் இவ்வாண்டு ஜனவரி வரையில் இரண்டு வெவ்வேறு இடங்களில் சம்பந்தப்பட்ட மாணவரை பாலியல் பலாத்காரம் புரிந்ததாக அவர் மீது குற்றச்சாட்டப்பட்டுள்ளது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்