KARAOKE-வில் வாடிக்கையாளர் சேவையில் ஈடுபடும் பெண்கள்; போலீசின் சோதணையில் 36 பேர் கைது

பகாங், மே 20-

KARAOKE கேளிக்கை மையத்தில், ஒரு மணி நேரத்திற்கு 80 வெள்ளியை செலுத்தினால், வாடிக்கையாளர் சேவையில் ஈடுபடும் பெண்கள் உடன் இருந்து மகிழ்விக்கும் இழிச்செயல், போலீஸ் மேற்கொண்ட இருவேறு அதிரடி சோதணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

பகாங், ரொம்பின்-னிலும் ஜொகூர், எண்டாவ்-விலும் உள்ள இரு கேளிக்கை மையங்களில், கடந்த சனிக்கிழமை இரவு மணி 8 அளவில், புக்கிட் அமானின் சூதாட்டம், ஒழுங்கீனம், குண்டர்கும்பல் துடைத்தொழிப்பு பிரிவு மேற்கொண்ட சோதணைகளில் அந்நடவடிக்கை அம்பலமாகியுள்ளது.

அவ்விரு சோதணைகளில், வாடிக்கையாளர்கள் சேவையில் ஈடுபட்ட 26 வெளிநாட்டு பெண்கள் உள்பட 35 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக புக்கிட் அமானின் D7 பிரிவின் தலைமைத் துணை இயக்குநர் மூத்த உதவியாளர் கோமிசியோனர் மொஹமட் பாரூக் இஷாக் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட 19 முதல் 55 வயதுக்கு உட்பட்ட அவர்கள் அனைவரிடமும் மேற்கொள்ளப்பட்ட சிறுநீர் பரிசோதணையில், 27 பேர் போதைப்பொருளை உட்கொண்டுள்ளதும் உறுதி செய்யப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்