தாய்லாந்திலிருந்து பேருந்து நுழைவதற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

புத்ராஜெயா, ஏப்ரல் 7 –

நாட்டில் சுற்றுப்பயணிகளை கவரும் ஒரு முன்னெடுப்பாக தாய்லாந்திலிருந்து கிளந்தான் னிற்கு பேருந்துகள் நுழைவதை அங்கீகரிப்பதை குறித்து போக்குவரத்து அமைச்சகம் பரிசீலிக்கும் என்று தெரியவந்துள்ளது.

கடந்த வியாழக்கிழமை, போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் வுடனான சந்திப்பில் இதுக்குறித்து விவாதிக்கப்பட்டதாக மாநில சுற்றுலா, கலாச்சாரம், கலை மற்றும் பாரம்பரிய குழுவின் தலைவர் டத்துக் காமாருடின் ம்டி நோர் கூறினார்.

இந்த சந்திப்பு சுமுகமாக நடைபெற்று முடிந்ததுடன் தாய்லாந்து திலிருந்து கிளந்தான்னிற்கு பேருந்து நுழைவது குறித்து அந்தோனி லோக் பரிசீலிப்பதாக வாக்குறுதி அளித்திருப்பதாக டத்துக் காமாருடின் அறிவித்தார்.

போக்குவரத்து அமைச்சரிடமிருந்து நல்ல ஒரு தகவல் பெறுவதற்காக காத்திருப்பதாகவும் விரைவில் இது அமலுக்கு வர வேண்டும் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் கருத்து தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்