போதைப்பொருள் பயன்படுத்தி வாகனத்தை ஓட்டிய மூன்று வாகன ஓட்டுனர்கள் அடையாளம் காணப்பட்டன

கோலாலம்புர், ஏப்ரல் 7 –

ஹேமா எம் எஸ் மணியம்

நோன்பு பெருநாளை முன்னிட்டு, சாலை போக்குவரத்துத் துறை ஜெ.பி. ஜே மேற்கொண்ட ஓப்ஸ் சோதனையின் போது ஐந்து நாட்களில் மொத்தம் 163,558 வாகனங்கள் சோதனையிடப்பட்டதுடன் அதில் 21,742 வாகனங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டிருப்பதாக சாலை போக்குவரத்துத் துறையின் அமலாக்கப் பிரிவின் தலைமை இயக்குநர் டத்தோ லொக்மான் ஜாமான் தெரிவித்தார்.

இந்த சாலை தடுப்பு சோதனையில் 54 டேபோ டெப்பொ மற்றும் 28 பிரதான பேருந்து நிலையங்களில் சாலை போக்குவரத்து இலாகாவைச் சேர்ந்த அதிகாரிகள் இந்நடவடிக்கையில் ஈடுபடுவதாக டத்தோ லொக்மான் விவரித்தார்.

போதைப்பொருள் தடுப்பு இலாகாவுடன் இணைந்து நடத்தப்பட்டச் சோதனையில் சட்டவிரோத போதைப்பொருள் பயன்படுத்தியதற்காக மூன்று அரசாங்க வாகன ஓட்டுநர்களை தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக டத்தோ லொக்மான் குறிப்பிட்டார் .

பெருநாள் காலங்களில் வாகன ஓட்டுனர்கள் சாலை விதிமுறைகளைப் பின்பற்றி வாகனங்களை ஓட்ட வேண்டும் என்பதுடன் சாலை விதிமுறைகளை மீறும் அனைத்து ஓட்டுனர்கள் மீதும் கைது மற்றும் சம்மன்கள் வழங்கப்படும் என்று டத்தோ லொக்மான் மேலும் கூறினார் .

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்