Vern’s கடையிலிருந்து 1,145 ஜோடி காலணிகள் கைப்பற்றப்பட்டன

கோலாலம்பூர், ஏப்ரல் 08-

Vern’s விற்பனை நிலையத்திலிருந்து ”அல்லா” சொல் கொண்டு அரபு எழுத்துக்களில் வடிவமைக்கப்பட்டிருக்கும் 1,145 ஜோடி காலணிகளை அதிகாரிகள் கைப்பற்றியதாக தெரியவந்துள்ளது.

கோலாலம்பூர், ஜொகூர், பினாங்கு உட்பட கெடா ஆகிய இடங்களிலுள்ள கடைகளிலிருந்து சர்ச்சைக்குரிய காலணிகளை கைப்பற்றியதாக போலீஸ் தலைவர் ரசாருதீன் ஹுசைன் தெரிவித்தார்.

இது தொடர்பாக இஸ்லாமிய மேம்பாட்டு துறையுடன் ஒன்றிணைந்து பணியாற்றி வருவதாகவும் இதுவரையில் யாரும் கைது செய்யப்படவில்லை என்று ரசாருதீன் ஹுசைன் இன்று செய்தியாளர் கூட்டத்தில் அறிவித்தார்.

சர்ச்சைகுரிய காலணிகளை வெளியிட்டிருப்பது தவறான புரிந்துணர்வை ஏற்படுத்தக்கூடும் என்று Vern’s Holding Sdn Bhd நிறுவனம் நேற்று ஓர் அறிக்கையில் குறிப்பிட்டிருந்ததாக ரசாருதீன் ஹுசைன் கூறினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்